பரமத்தி வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சரகத்திற்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியைச் சேர்ந்தவர் நல்லையகவுண்டர் (65). கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம், நஞ்செய் ஊத்துக்குளியைத் சேர்ந்த மகேஷ்குமார் (35) தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். முன்னால் சென்று கொண்டிருந்த நல்லையகவுண்டரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் நல்லையகவுண்டர் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மகேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு

தூத்துக்குடியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


