கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கோயில் வளாகத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோயில் வளாகத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கோயில் வளாகத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கமலம் அருகே உத்திரகிடி காவல் ஊராட்சிக்குள்பட்ட மலைவேப்பன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்டக் காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
மலைவேப்பன்குட்டை பழைய விநாயகர் கோயில் படிக்கட்டில் அமர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதை தட்டிக் கேட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த லோகு, ராஜேஷ்கண்ணன் ஆகிய இருவரையும் மது அருந்தும் கும்பல் தாக்குகின்றனர். இதனால் கிராம மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும், கோயில் வளாகத்தில் மது அருந்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.