தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு அர்ச்சகர் நியமிக்க கோரிக்கை

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை  விடப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை  விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆன்மிக இந்து சமயப் பேரவை கெளரவத் தலைவர் பி.ஏகாம்பரம் வெளியிட்ட அறிக்கை: ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் கிழக்குப் புறத்தில் அருள்மிகு ரங்கநாயகி தாயார் உடனுறை ரங்கநாதர் கோயில் உள்ளது. கார்கோடகன் என்ற பாம்பின் மீது ரங்கநாதர் அனந்த சயன நிலையில் உள்ளார். மலையைக் குடைந்து குடவறைக் கோயிலாக உருவாக்கப்பட்டுள்ள ரங்கநாதர் கோயில் அடிவாரத்தில் படிவாசல் அருகே ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், இந்தக் கோயிலுக்கு தனியாக அர்ச்சகர் நியமிக்காததால், அதிகாலையில் இக்கோயிலில் தீபாராதனை செய்யும் அர்ச்சகர் கோயில் மூலவர் அறையைப் பூட்டிவிட்டு சென்று விடுகிறார். இதனால், ஸ்ரீவீர ஆஞ்சநேயரை தரிசித்து வழிபட வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியான செவ்வாய்க்கிழமை அன்றும் இக்கோயிலின் நடை பூட்டப்பட்டிருந்தது. அறநிலையத்துறையின் இந்த செயல் பக்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. 
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு தனியாக அர்ச்சகர்களை நியமித்து குறிப்பிட்ட நேரங்களில் கோயிலை முழுமையாகத் திறந்து வைத்து பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்த கோயிலுக்கு அர்ச்சகரை நியமிக்க அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.