ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க ஆசிரியர்கள் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. 

Updated On :31 டிசம்பர் 2018, 10:17 am IST

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. 
கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் அதன் மாநிலத் தலைவர் முத்துசாமி தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவர் பழனியப்பன் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் செல்வராஜூ பேசினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்துக்கு  இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.
21 மாத ஊதிய நிலுவையை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மூத்தோர் மற்றும் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்க அனுமதி வழங்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூடுவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும். சத்துணவு மையங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். மாவட்ட துணைச் செயலர் அருள்மணி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.