ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாவை பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் அனைத்துத் துறைகளும் இணைந்து  "டெக் பினிக்ஸ்-2018' என்ற தலைப்பில்  தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் கடந்த 2,3 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:50 am

DIN

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் அனைத்துத் துறைகளும் இணைந்து  "டெக் பினிக்ஸ்-2018' என்ற தலைப்பில்  தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் கடந்த 2,3 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
முன்னதாக இதன் தொடக்க விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி. நடராஜன் தலைமை வகித்துப் பேசியது:
தேசிய அளவிலான கருத்தரங்குகளில் மாணவர்கள் பங்கு கொள்வதால் அவர்களுக்கு தலைமைத்துவம், நிர்வகிக்கும் ஆற்றல் போன்ற திறன்கள் அதிகரிக்கும் என்றார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் (மனித வளம் மற்றும் மெடிக்கல்) ஆர். பன்னீர் பேசியதாவது:
விவசாயம், மருத்துவம், இயற்கை பேரிடர் தற்காப்பு போன்ற துறைகளுக்குப் பயனுள்ள வகையில் புதிய கண்டுபிடிப்புகளையும், கருவிகளையும் மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்றார். கெளரவ விருந்தினராக  மாலதி ஆகியோர் கலந்து கொண்டார்.
கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், தங்களுடைய தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு தனித் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.  மாணவ, மாணவிகள் சமர்பித்த 413 ஆய்வுக்கட்டுரைகளில், 392 ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 45-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் நிர்வாகம் கே.கே. ராமசாமி, இயக்குநர் (மாணவர் நலன்) அவந்தி நடராஜன்,  தி ஆர்ட் ப்ரூ நிறுவனத்தின் சி.இ.ஓ.,  ராஜவேல், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர் எம். பிரேம் குமார், திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளியின் இயக்குநர் பாப்பன், கல்லூரி முதல்வர்கள், முதன்மையர்கள்,துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.