தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சியின்  எலச்சிபாளையம்  ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:38 am

DIN

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சியின்  எலச்சிபாளையம்  ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றிய செயலர் எம்.தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி சிறப்புரை நிகழ்த்தினார். வரும் மார்ச் 1-ஆம் தேதி பிறந்தநாள் காணும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினையும், மார்ச் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாட்டுக்கு திரளாக  கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், இளைஞர்அணி அமைப்பாளர் மதுரா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் செழியன், முன்னாள் ஒன்றிய செயலர் சேரன் சக்திவேல், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் எம்.ராமசாமி, ஜயப்பன், சீனி மற்றும் ஊராட்சி செயலர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.