தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிப்ஸ் ரக மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்வு

பரமத்திவேலூர் வட்டத்தில் சிப்ஸ் தயாரிப்பதற்கான மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:10 am

DIN

பரமத்திவேலூர் வட்டத்தில் சிப்ஸ் தயாரிப்பதற்கான மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர் வட்டத்தில் எஸ். வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பதற்காக அதிக அளவில் வியாபாரிகள் கேரள மாநிலத்திற்கு வாங்கி செல்வதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் சிப்ஸ் ரக மரவள்ளிக்கிழங்கு,  டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையானது. நிகழ் வாரம் சிப்ஸ் ரக மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்து 800-க்கு விற்பனையாகிறது. கிழங்கு ஆலைகளுக்கு வாங்கிச்செல்லப்படும் மரவள்ளிக்கிழங்கு, டன் ஒன்று கடந்த வாரம் ரூ. 6 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.