மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்த ஏழை மாணவியின் கல்வி உதவித் தொகையாக ரூ.43 ஆயிரம் வழங்கப்பட்டது.
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ச.மோனிகா என்ற மாணவி 12-ம் வகுப்பில் 1169 மதிப்பெண்களும், 10-ம் வகுப்பு தேர்வில் இவர் 497 ம் பெற்றிருந்தார். இம் மாணவி நீட் தேர்வில் 275 மதிப்பெண்கள் பெற்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில வாய்ப்பு பெற்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கூலி தொழிலாளிகள் என்பதால், பயில வசதியில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வி பயில ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மு.ஆ.உதயகுமார் ரூ.10 ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கினார். இதே போல், ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோயில் தலைவர் பழனிசாமி மகன் பி.சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சார்பாக ரூ.30 ஆயிரம் வழங்கினர்.
புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் பி.சௌந்தரராஜன், து.முத்துக்குமார் உள்ளிட்டோர் என மொத்தம் ரூ.43 ஆயிரம் மாணவிக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








