வரகூராம்பட்டி ஊராட்சியி நாச்சிபாளையம் பூலக்காடு பகுதிகளுக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்படாததால் ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் பிரிந்து 3 கிலோமீட்டர் தொலைவு செல்லும் இச் சாலையைப் புதுப்பிக்க பாதி தூரத்திற்கு பழைய ஜல்லி, கற்கள் எல்லாம் பெயர்த்து எடுக்கபட்டுள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர்ந்த சாலை பணி இடையில் பணி எதுவும் நடைபெறாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், பெண்கள், விவசாயிகள், பள்ளி வாகனங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இப் பகுதியில் நடைபெறும் சாலை பணி குறித்து எவ்வித அறிவிப்புப் பலகையும், எச்சரிக்கைப் பலகையும் இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் அதிக எடை கொண்ட சரக்கு வாகனங்கள் இச் சாலை வழியாகச் செல்லும் போது சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் நடுவழிகளில் சிக்கி கொள்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து, இதுகுறித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்

நெட்பிளிக்ஸில் முதல் இடம் பிடித்த கான் சிட்டி திரைப்படம்!

அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


