மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தண்ணீர் திருட்டைத் தடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்: ஆட்சியர்

குடிநீர் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது,  அதே சமயத்தில்

Updated On :29 மார்ச் 2018, 2:43 am

குடிநீர் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது,  அதே சமயத்தில் தண்ணீர் திருட்டை தடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம். 
  நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி,   நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி,  திருச்செங்கோடு கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன்,  வேளாண்மை இணை இயக்குநர் கே.கந்தசாமி,   ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  ரா.சுப்ரமணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
 விவசாயிகள் கோரிக்கை விவரம்:
நடேசன்:  வேளாண்மை, கால்நடை, மீன்வளத் துறை அலுவலர்கள் யாரும் கள ஆய்வுக்கு வருவதில்லை.  இதனால் விவசாயம், அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு,  மீன் வளர்ப்பு ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அலுவலர்கள் ஆய்வு செய்து பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளாத வரை விவசாயமும் அதனைச்சார்ந்த தொழிலும் விவசாயிகளுக்கு எந்தப் பலனையும் அளிக்காது.  
  ஒருங்கிணைந்த பண்ணையம் முறைக்கு விவசாயிகள் மாறிவரும் நிலையில்,  வேளாண்மை,  கால்நடை,  மீன்வளத் துறை அலுவலர்கள் விவசாய நிலங்களில் மாதம் ஒரு முறையேனும் கள ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்.  
 இதுபோல்,  குறை தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் பல மனுக்களுக்கு பதில் வருவதில்லை.  சில மனுக்களுக்கு பதில் அனுப்பினாலும்,  முறையானதாக,  விளக்கமானதாக இல்லை. 
ஆட்சியர் : வேளாண் அலுவலர்கள் கள ஆய்வுக்குச் செல்ல அறிவுறுத்தப்படும்.  நானும் ஆய்வு செய்ய வருகிறேன்.  விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது அடுத்த மாத கூட்டத்திற்கு முன் பதில் அளிக்க வேண்டும்.  அந்த பதில் விவர நகலை என் பார்வைக்கு அனுப்பிவைக்க வேண்டும்,  அலுவலர்களின் பதில் எப்படி உள்ளது என நானும் பார்க்கிறேன் என்றார். 
அப்பாவு: குடிநீருக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  ஜேடர்பாளையம் தடுப்பணைக்கு மேல் கொக்கராயன்பேட்டை வரை ஆற்றில் இருந்து பம்புசெட்டுகள் மூலம் சுமார் கால் டிம்எம்சி தண்ணீர் திருடப்பட்டுள்ளது.  காவிரியில் தண்ணீர் திருட்டைத் தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,. ஆனால்,  இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
ஆட்சியர்: வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி,  பம்ப்செட் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சரவணன்: மக்காச்சோளம்,  நிலக்கடலை,  மஞ்சள் விதைப்பு மற்றும் அறுவடை இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும்.   தனியாரிடம் அதிக வாடகை கொடுக்க வேண்டியுள்ளதால்,  விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.    
பெரியசாமி:  ராஜவாய்க்கால் மூலம் 20,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.  இங்கு கிணறுகள் இல்லை,  இப்போது கிணறுகள் புதிதாக வெட்டினாலும் உடனடியாக மின் இணைப்பு பெற முடியாது.  இதனால் ராஜ வாய்க்கால் பாசன நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிரைக் காப்பாற்ற தொடர்ந்து 5 நாட்களுக்கு தண்ணீர் விட  வேண்டும்.  குடிநீருக்கு திறக்கப்பட்ட தண்ணீர் பம்ப்செட் வைத்து திருடப்பட்டு வரும்போது,  ராஜ வாய்க்காலில் தண்ணீர் விடாதது பாரபட்சமான செயல். 
ஆட்சியர்:  ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கையெடுக்கப்படும்.  பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது.
விவசாயிகள்,  அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியர்:  கூட்டம் தொடங்கியுடன்,  விவசாயி துரைசாமி எழுந்து குறைதீர் கூட்டங்களில் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது பதில் வருவதில்லை என்றார்.  இதற்கு பதில் அளித்த ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது அடுத்த கூட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு பதில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.        
 ஆனால்,  ஒவ்வொரு கூட்டத்திலும் விவசாயிகள் பதில் வரவில்லை என்று கூறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  
குறைதீர்கூட்டத்திற்கு வரும் அலுவலர்கள் கூட்டத்திற்கு வந்தோம்,  சென்றோம் என்று இல்லாமல், ஒப்படைக்கப்படும் மனுக்கள் மீது உரிய, விளக்கமான பதிலை அடுத்த கூட்டத்திற்குள் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு அனுப்புவதோடு, அதன் நகலை அனுப்பிவைக்க வேண்டும்.  இவ்வாறு செயல்படாத துறை அலுவலர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படும்.
 இதுபோல்,  குறைதீர் கூட்டம் என்பது விவசாயிகள் குறைகளைத் தெரிவிக்கும் கூட்டம்.  
விவசாயிகள் கோரிக்கைகளைத் தெரிவித்தால்,  சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கையெடுக்கப்படும்.  கூட்டத்தில் விவாதம் நடைபெறலாம்,. ஆனால் எழுந்து நின்று முழக்கம் எழுப்பக் கூடாது.
 கூட்ட அரங்கு போராட்டம் நடத்தும் இடம் அல்ல என்பதை விவசாயிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  இத்தகைய செயல்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அடுத்த கூட்டத்தில் இருந்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.