தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மகாவீர் ஜெயந்தி: கொப்பரைத் தேங்காய் ஏலம் ரத்து

மகாவீர் ஜெயந்தியையொட்டி பரமத்திவேலூர் சேலம் விற்பனைக் குழு, ஒழுங்குமுறைக் கூடத்தில் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Updated On :29 மார்ச் 2018, 2:42 am

மகாவீர் ஜெயந்தியையொட்டி பரமத்திவேலூர் சேலம் விற்பனைக் குழு, ஒழுங்குமுறைக் கூடத்தில் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. 
பரமத்தி வேலூர் சேலம் விற்பனைக் குழு ஒழுங்குமுறைக் கூடக் கண்காணிப்பாளர் கவிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 
 ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பரமத்தி வேலூர் சேலம் விற்பனைக் குழு, ஒழுங்குமுறைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். மார்ச் 29 ( வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் வரும் 5-ஆம் தேதி வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெறும். ஏலத்துக்கு வரும் விவசாயிகள் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.