ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருச்செங்கோடு நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா

திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:56 am IST

திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்  பொன்.சரஸ்வதி தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சிஆணையாளர்  மகேஸ்வரிமுன்னிலை வகித்தார்.  தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  பி.தங்கமணி கலந்து கொண்டு,  திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 139 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ. 2ஆயிரம் மதிப்பிலான சீருடைகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீருடைகளை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில்,  திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சுகுமார்,  துப்புரவு மேற்பார்வையாளர் அரசகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.