சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படாது

தமிழகத்தில் எந்த காலத்திலும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படமாட்டாது  என மின்சாரம், மதுவிலக்கு

Updated On :5 நவம்பர் 2018, 8:53 am IST

தமிழகத்தில் எந்த காலத்திலும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படமாட்டாது  என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  இப்பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இதில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மின் விளக்குகளை ஒளிர விட்டு,  கல்வெட்டைத் திறந்து வைத்தார். 
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடும்போதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைப்பதாக இருந்தால் கையெழுத்திட மாட்டோம் எனத் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியா முழுவதுமே விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் வைக்காத நிலையை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.  இதனால் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படமாட்டாது.  இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.  20 தொகுதிகளிலும் தேர்தல் பணியை தொடங்க தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.  இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.