குரு பெயர்ச்சியை முன்னிட்டு உலக நன்மைக்காக நாமக்கல்லில் சிறப்பு குரு மகா யாக பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு சித்தி விநாயகர் சன்னிதானம் சார்பில் நாமக்கல் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு மகா யாகபூஜைகள் 2 நாள்கள் நடைபெற்றன.
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீமகா கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஸ்ரீகுரு மகா யாகம் துவங்கியது. யாகம் முடிவில் ஸ்ரீசங்கரய்யர் முன்னின்று மகா பூர்ணாஹூதியை நடத்தி வைத்தார். பின்னர் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4.15 மணிக்கு குரு பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கி கூறி சங்கரய்யர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!

”எடப்பாடியார் பதில் சொல்லியே ஆகணும்!” பிரேமலதா விஜயகாந்த் | ADMM
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


