குமாரபாளையம் நகரில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமாரபாளையம் நகர திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நகரச் செயலர் கோ. வெங்கடேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
குமாரபாளையம் நகரில் 10 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்த நிலையில், தற்போது புதிதாக மேலும் ஒரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும். அனுமதியற்ற மது அருந்தும் கூடங்களின் மூலம் 24 மணிநேரமும் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வருவாயைப் பறிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, போதை புகையிலை, பாக்குகள் விற்பனை நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, திமுக மாவட்டச் செயலர் கே.எஸ். மூர்த்தி தலைமையில், குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர்எஸ். சேகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் அனைத்துக் கட்சியினரையும் திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மது வாங்கிய விவகாரம்: காவல் நிலையத்தில் கணவருடன் கா்ப்பிணி தா்னா

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

