அபாயகரமற்ற, மறுவடிவமைப்புக்கு ஏற்ற வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பமாக சூரிய ஒளியில் மின்சார தயாரிக்கும் முறை அமைந்துள்ளது என சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் பி.சிட்டிபாபு தெரிவித்தார்.
குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை சூரிய ஒளியியல் அமைப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
பயிலரங்கத் தொடக்க விழாவிற்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கரானந்த் முன்னிலை வகித்தார். மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் துறைத் தலைவர் வி.எஸ்.அருள் முருகன் வரவேற்றார். இயக்குநர்(நிர்வாகம்) வி.கே.சண்முகநாதன் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினரை துணைப் பேராசிரியை கே.உமாதேவி அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன(ஐஐடி) கணினி அறிவியல் மற்றும் மின்னியல் துறையின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவு முதுநிலை உதவிப் பேராசிரியர் பி.சிட்டிபாபு பேசியது: அனைத்து பொறியியல் துறைகளிலும் வடிவமைப்பு, பொருள் தயாரிப்பு சார்ந்த கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்வாயிலாக, புதுமையான படைப்பாற்றல், வடிவமைப்பு, தொழில்நுட்பத்திறன் ஆகியவற்றில் மாணவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இளங்கலை பொறியியல் படிப்புகள்
உதவுகின்றன.
மின் உற்பத்தியில் மரபு சார்ந்த அனல், அணு மின்சாரம் ஆகிய முறைகளில் இருந்து மாறுபட்டதுதான் சூரிய ஒளியியல் அமைப்பு. இந்த முறையானது தற்போதைய தலைமுறைக்கு ஏற்றதாகும். இந்த முறையானது மரபுசாரா பசுமை தொழில்நுட்பம், பசுமை வீடு ஆகிய தொழில்நுட்ப முறைகளைச் சார்ந்ததாகும். அபாயகரமற்ற, மறுவடிவமைப்புக்கு ஏற்ற வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பமாகும் என்றார்.
கருத்தரங்கில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, தூத்துக்குடி, மாவட்டங்களின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 300-க்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும்: முதல்வர் விஜய் சுதந்திர நாள் உரை!

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுதந்திர நாள் விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது!

மழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகள்: கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


