
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் உள்ள படித் துறையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு கீழ் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. சிலைகளை கரைக்க அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி களிமண்ணால் செய்து சுடப்படாதது மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயார் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள படித் துறைகளில் பொதுமக்கள் பயன்பாட்டு பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு கீழ் உள்ள பகுதியில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





