
நாமக்கல் மாவட்டத்தில் 622 இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நாமக்கல் நகரின் பல இடங்களில் சதுர்த்தியையொட்டி விநாயர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல் 6 அடி உயரம் கொண்ட சிலைகள் விற்பனைக்குக் கிடைக்கிறது. பொதுமக்கள் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச்
செல்கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 622 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். அரசு விதிமுறைப்படி சிலைக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சிலை அமைப்பாளர்களிடம் போலீஸார்
அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






