உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:28 am IST

எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம்,  எர்ணாபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.  வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தொற்றாநோய் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரங்கசாமி திட்ட விளக்க உரையாற்றினார். 
மாவட்ட குடும்ப நலப் பணிகள் இணை இயக்குநர் உஷா தலைமை வகித்தார்.  மருத்துவர் மல்லிகா பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை வாய்புற்றுநோய் வரும் விதம், தடுக்கும் முறைகள் பற்றி விளக்கம் அளித்தார். சித்த மருத்துவத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள், வந்தபின் உணவு முறைகள் மேற்கொள்வது பற்றியும்,  புற்றுநோய் குணப்படுத்தும் மூலிகைகளான சேராங்கொட்டை, நித்யகல்யாணி, அமுக்கரகிழங்கு, மஞ்சள், கொடிவேலி,  வெள்ளைப்பூண்டு, சீந்தில் போன்ற மூலிகைக் கண்காட்சி வைத்து மருத்துவர் பூபதிராஜா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புற்றுநோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நாடகம், தனியார் செவிலியர் கல்லூரி மாணவியரால் நடத்தப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில், 51 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நிறைவில் மருத்துவ அலுவலர் பானுப்பிரியா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.