நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், உலகளவில் இளம் தொழில்முனைவோருக்கான சவால்களும், வாய்ப்புகளும் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் சுபத்ரா வரவேற்றார்.
கருத்தரங்கில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை பேராசிரியர் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உலகளவில் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்தும், அவற்றில் உள்ள சவால்களை இளைய தலைமுறையினர் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.
இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் சுபத்ரா, பேராசிரியர்கள் மற்றும் வணிகவியல் மன்றப் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் செல்வராஜு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








