நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மோகனூரில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 8:52 am IST

மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மோகனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு தியாகி பெரியசாமி நகர், இளையநிலா நற்பணி மன்றம் சார்பில் 24-ஆம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
விழாவுக்கு ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். தண்டபாணி வரவேற்றார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்லராசாமணி போட்டியை தொடக்கி வைத்தார்.
போட்டியில் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, மோகனூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 அணிகள் கலந்துகொண்டன. இதில், பரமத்தி வேலூர் அருகே கோப்பனம்பாளையத்தைச் சேர்ந்த மாவீரன் வீரப்பன் நினைவுக் குழுவினர் முதல் பரிசு ரூ.12,019 பெற்றனர். மோகனூர் சின்னநிலா குழுவினருக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சிறுவர், சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.