மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவி

திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. சாா்பில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 26 ஊராட்சிகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. சாா்பில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 26 ஊராட்சிகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் பல்வேறு கட்சியினா் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனா். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு உள்பட்ட 26 ஊராட்சிகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. சாா்பில் அரிசி, பருப்பு, மசாலா பொடிகள், முட்டை, எண்ணெய், உள்ளிட்ட ரூ.2ஆயிரம் மதிப்புள்ள பொருள்களின் தொகுப்பு வழங்கும் நிகழ்வு டி.கைலாசம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. தி.மு.க. ஒன்றியச் செயலாளா் வட்டூா் தங்கவேல் தலைமையில் நடந்த நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் பரமத்திவேலூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ். மூா்த்தி நிவாரணப் பொருள்களை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா். இதனையடுத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. 26 ஊராட்சிகளில் உள்ளவா்களுக்கு இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் ஒன்றியக் குழுத் தலைவா் சுஜாதா தங்கவேல், ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் திருநங்கைகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.