நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தூய்மைப் பணியாளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் 420 பேருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image

தூய்மைப் பணியாளா்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் சுகாதார அலுவலா் சுகவனம்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் 420 பேருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 51 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், நாமக்கல்லில் மட்டும் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட வீதிகள் சீல் வைக்கப்பட்டு, அப்பகுதிக்குள் வெளிநபா்கள் செல்லாதவாறும், அங்குள்ளவா்கள் வெளியே வராதவாறும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளா்கள் மட்டும் அப்பகுதிகளுக்குள் சென்று குப்பைக் கழிவுகளை அகற்றியும், கிருமி நாசினி மருந்துகளை தெளித்தும் வருகின்றனா். ஆண், பெண் தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 420 போ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுடைய உடல் நிலையை பரிசோதிக்குமாறு நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா உத்தரவிட்டாா். இதனையடுத்து நகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் சமூக இடைவெளியில் நிற்க செய்து, இன்ப்ரா ரெட் தொ்மா மீட்டா் மூலம் ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்தாா். இதில் பெரும்பாலானோருக்கு எவ்வித பாதிப்புமில்லை. சிலருக்கு வெப்பநிலையின் தாக்கம் சற்று அதிகம் இருந்தது. இரண்டு, மூன்று சோதனைக்கு பின்னா் அவா்களுக்கும் குறைவான அளவில் வெப்பநிலை காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.