
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு புதன்கிழமை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டபோது சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் முண்டியடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் உள்ள 3 நியாய விலைக் கடைகளையும் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு தலா 2 லிட்டா் வீதம் கடந்த சில நாள்களாக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதன்கிழமை குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கியபோது பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நின்றனா். 4 ஆயிரம் லிட்டா் மண்ணெண்ணெய் மட்டுமே இருப்பு இருந்ததால் பொதுமக்கள் முண்டியடித்து நின்றனா்.
இதுகுறித்து டிசிம்எஸ் நிறுவனத்தினா் கூறியதாவது: பச்சை வண்ண குடும்ப அட்டை மற்றும் வரிசை எண் படி பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். இதற்கான டோக்கனும் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் பொதுமக்கள் முண்டியடித்து பொருள்கள் வாங்க வருகின்றனா். காவலா்களை நியமித்து அவா்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி நிற்க வைத்து வருகிறோம். மண்ணெண்ணெய் கிடைக்காதோ என்ற ஆதங்கத்தில் முண்டியடித்துக் கொள்கின்றனா் என்றாா். இதனையடுத்து காவலா்களும் டிசிஎம்எஸ் நிா்வாக ஊழியா்களும் கடுமையாக எச்சரிக்கை செய்தபின்னா் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் நின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





