6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் 2.5 கிலோ எடையுடைய யானை தந்தங்கள் பறிமுதல்: 2 பேரை பிடித்து வனத்துறை விசாரணை

திருச்செங்கோட்டில்  வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ யானை தந்தத்தை வனத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 

News image
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களை பார்வையிடும் மாவட்ட வன அலுவலர் ஆர். காஞ்சனா.
Updated On :8 ஆகஸ்ட் 2020, 10:26 am

DIN

நாமக்கல்: திருச்செங்கோட்டில்  வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ யானை தந்தத்தை வனத்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே யானைகள் மரணம் என்பது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறான சூழலில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஒரு வீட்டில் இரண்டு தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினர் மூலம் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர் பதுக்கி வைத்திருந்த தந்தங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா செய்தியாளர்களிடம் கூறியது: காவல்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இவை எங்கிருந்து வந்தன, இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்புடையது என்பது குறித்து எங்கள் பிடியில் உள்ள இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தந்தங்கள் 2.5 கிலோ எடை உடையது. கடத்தியது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிடிபட்டவர்களின் விவரங்கள், இதர தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.