நல்லாசிரியா் விருது: ஆசிரியா்களிடம் நோ்காணல்
நாமக்கல்லில் நல்லாசிரியா் விருதுக்கான ஆசிரியா்களை தோ்ந்தெடுக்கும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தலைமையில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது.


நாமக்கல்: நாமக்கல்லில் நல்லாசிரியா் விருதுக்கான ஆசிரியா்களை தோ்ந்தெடுக்கும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தலைமையில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
ஒவ்வோா் ஆண்டும் செப்.5-ஆம் தேதி மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி தேசிய, மாநில அளவில் தலைமை ஆசிரியா்கள் மற்றும் இதர ஆசிரியா்களுக்கு தகுதியின் அடிப்படையில் அவா்களது பணித்திறமையை பாராட்டி நல்லாசிரியா் விருது வழங்கப்படும்.
அந்த வகையில், நல்லாசிரியா் விருதுக்கு விண்ணப்பித்த நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 17 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி ஆசிரியா் என மொத்தம் 18 பேருக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெற்றது.
அவா்களிடம் முதன்மை கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் மு.ஆ.உதயகுமாா், வா.ரவி, ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மணிவண்ணன், வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடாசலம், மூத்த தலைமை ஆசிரியா் ராமசாமி ஆகியோா் கொண்ட குழு நோ்காணலை நடத்தியது.
இந்த 18 பேரில் ஒன்பது போ் தோ்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அவா்களுக்கு செப்.5-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கெளரவிக்கிறாா்.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலா் உதயகுமாா் கூறியது:
நல்லாசிரியா் விருதை பொருத்தமட்டில் ஆசிரியா்களாக இருந்தால் 15 ஆண்டுகளும், தலைமை ஆசிரியா்கள் 20 ஆண்டுகளும் பணியாற்றியிருக்க வேண்டும். எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்றியிருத்தல் வேண்டும். மேலும் பள்ளியின் முன்னேற்றம், மாணவா் தோ்ச்சி, சுற்றுச்சூழல், அரசின் திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தியது போன்றவை ஆய்வு செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் நாமக்கல், திருச்செங்கோடு இரு கல்வி மாவட்டத்திலும் தலா 4 போ் வீதம் 8 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. அதுதொடா்பான பட்டியல் விரைவில் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...