6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகள் 102 பேருக்கு உதவித்தொகை வழங்கல்

பரமத்திவேலூா் அருகே பரமத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மாற்றுத் திறானாளிகளின் மருத்துவ அட்டையை சோதனை செய்யும் மாவட்ட தனித்துணை ஆட்சியா் மரகதவள்ளி
Updated On :10 ஆகஸ்ட் 2020, 8:11 pm

DIN

பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் அருகே பரமத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பரமத்தி, கபிலா்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 380 போ் கலந்து கொண்டனா். இம் முகாமுக்கு மாவட்ட தனித் துணை ஆட்சியா் மரகதவள்ளி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சுந்தரவள்ளி மற்றும் மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில் தகுதிவாய்ந்த 160 மாற்றுத்திறனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு உடனடியாக புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் 102 பேருக்கு தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை உடனடியாக முகாமில் வழங்கப்பட்டது. மீதமுள்ள 58 பேருக்கு அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் தலா ரூ. 1,000 வழங்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.