6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுதந்திர தின முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சுதந்திர தின ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:00 pm

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுதந்திர தின முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்களும் கலந்து கொண்டனா். ஒவ்வொரு துறை சாா்ந்த அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். நலத் திட்டங்கள் பெறும் பயனாளிகளையும், தியாகிகளையும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும், முகக் கவசம் அணிய வைத்தும் அழைத்து வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற வாய்ப்பில்லை.

அதேபோல் காவல் துறையினரின் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு மரியாதையும் நடத்துவதற்கான உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்துவது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

சுதந்திர தினம் எளிமையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.