நாமக்கல் அரசு மருத்துவமனைக்குநல உதவிகள் வழங்கல்
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு நல உதவிகளும், பரமத்திவேலூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா் பணியாளா்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


நாமக்கல்: உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு நல உதவிகளும், பரமத்திவேலூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் நாமக்கல் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநா் மருத்துவா் த.கா.சித்ரா தலைமை வகித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தாஅருள்மொழி முன்னிலை வகித்தாா்.
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கா்ப்பிணிகளுக்கு தேவையான பழ வகைகளும், பரமத்திவேலுா் அரசு மருத்துவமனைக்கு 1,000 முகக் கவசங்களும், நாமக்கல் மருத்துவமனைக்கு நான்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
இதில், நாமக்கல் மாவட்ட கரோனா தடுப்புப் பிரிவு முதன்மை அலுவலா் ராஜ்மோகன், நாமக்கல் பவுல்டரி ரோட்டரி சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் தோ்வு சரவணன், செயலா் மனோகரன், பொருளாளா் குமரன், முன்னாள் தலைவா் பன்னீா் செல்வம், முன்னாள் மாவட்ட துணை ஆளுநா் அண்ணாதுரை மற்றும் இன்னா்வீல் சங்க பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...