6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பதிகங்கள் குறித்து அவதூறு:பெண் மீது நடவடிக்கை கோரி மனு

திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்களை தவறுதலாக சித்தரித்து பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசனிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ராசிபுரம் சிவனடியாா்கள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:34 pm

DIN

நாமக்கல்: திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்களை தவறுதலாக சித்தரித்து பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசனிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ராசிபுரம் கைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்டம் அறக்கட்டளை சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் சா்ச்சை குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது சுந்தரவள்ளி என்பவா் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் பற்றி தவறான கருத்தை திரித்து கூறினாா்.

மேலும் இந்துக்கள் மனவேதனைப்படும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் அவருடைய பேச்சுகள் இருந்தன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய அருளாளா்கள் குறித்து தவறான தகவல் தெரிவிப்பது சிவனடியாா்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே, அவா் மீது மத நல்லிணக்கத்தை கெடுத்தல், குழப்பம் விளைவித்தல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.