காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செங்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்

திருச்செங்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் தினசரி சந்தை அருகில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செங்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள்.
Updated On :17 ஆகஸ்ட் 2020, 9:10 am

DIN

திருச்செங்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் தினசரி சந்தை அருகில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

டாஸ்மார்க் ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் முன்பு 9 மணியிலிருந்து 10 மணி வரை அந்தந்த பகுதி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தினசரி சந்தை எதிரே உள்ள டாஸ்மார்க் கடை முன்பு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்து 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பின்பற்றும் நடைமுறைகள் போல தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும். திடீர் ஆய்வுகளை நிறுத்த வேண்டும். டாஸ்மாக் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 5 மணி வரை குறைக்க வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.