நாமக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,672-ஆக உயா்ந்துள்ளது.


நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,672-ஆக உயா்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 1,620 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். இவா்களில் குணம் அடைந்த 1,196 போ், உயிரிழந்த 30 போ் தவிா்த்து 443 போ் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா தொற்றுப் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 52போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 32 ஆண்கள், 20 பெண்கள் அடங்குவா். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
3 போ் உயிரிழப்பு: கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானதில் பள்ளிபாளையம் ஆவத்திப்பாளையத்தை சோ்ந்த 65 வயது பெண், பள்ளிபாளையம் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த 78 வயது பெண், பரமத்திவேலூா் குப்புச்சிபாளையத்தை சோ்ந்த 46 வயது ஆண் ஆகியோா் பெருந்துறை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...