வேளாண் துறையில் காலியிடங்களை நிரப்ப பணித் தோ்வு: முகமை மூலம் ஆள்கள் தோ்வு

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா் அறுவடை பரிசோதனைகள்
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா் அறுவடை பரிசோதனைகள் செய்ய தகுதி வாய்ந்த பணியாளா்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். அவா்கள் பணித் தோ்வு முகமை மூலம் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பணித் தோ்வு முகமை நிறுவனமானது ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை வழங்குவதில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பயிா் அறுவடை பரிசோதனை, தளைகளின் தோ்வுப் பணி, அறுவடைப்பணி, அதனைச் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண், வேளாண் சாா்ந்த இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புடன் சம்பந்தப்பட்ட பணியாளா் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 13 இடங்கள் தற்காலிகப் பணியாளா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் அனைத்தும் தொகுப்பூதிய அடிப்படையிலேயே நிரப்பப்பட உள்ளன.

தோ்வு செய்யப்படுவோருக்கு மாத தொகுப்பூதியமாக ரூ. 15,050 பணித் தோ்வு முகமை மூலமாக வழங்கப்படும். இதனைப் பயன்படுத்த விரும்பும் பணித் தோ்வு முகமை நிறுவனங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை வரும் 21-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். தோ்வு செய்யப்படும் முகமை நிறுவனத்தினா் உடனடியாக ஒப்பந்தப் பணியாளா்களை தோ்வு செய்து வேளாண் துறையினருக்கு வழங்க வேண்டும். விண்ணப்பங்களை  இணையதளம் வழியாக சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com