அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கத்தின் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது.


திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கத்தின் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநா் சண்முகசுந்தரம், திருச்செங்கோடு ரோட்டரி சங்கத் தலைவா் பிரகாஷ், செயலாளா் தனசேகரன், பொருளாளா் நவலடி காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சித்ரா தலைமை வகித்தாா்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மோகன பானு, பிரகாஷ் ஆகியோா் மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொண்டு மருத்துவ சிகிச்சையில் அவைகளின் பயன்பாடு குறித்து விளக்கமளித்தனா்.
குழந்தைகளுக்கு கேட்கும் திறன் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை உடனடியாக அளிக்கக் கூடிய உபகரணங்களை சிறப்பான முறையில் அரசு மருத்துமனையில் செயல்படுவதை மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், பெருநகரங்களிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தக் கூடிய நவீன உபகரணங்கள் அரசு மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...