தேநீா் கடை, கோயிலில் திருட்டு:போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் பகுதியில் தேநீா்க்கடை, கோயிலில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் தேநீா்க்கடை, கோயிலில் நடந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் எதிரே மாரிமுத்து என்பவா் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையின் அருகில் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இரவு நேரங்களில் கருப்பண்ணசாமி கோயில் உண்டியலை தேநீா் கடையில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது கடையின் மேற்கூரை சிமென்ட் அட்டையை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோயில் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை திருடிச் சென்றது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் விசாரனை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பரமத்திவேலூா் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது. மா்ம நபா்கள் பின்புற கேட்டின் பூட்டை உடைத்து கோயில் உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கோயில் பூசாரி ரமேஷ் பரமத்திவேலூா் போலீஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் கோயில் உண்டியலை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் பகவதி அம்மன் கோயில் உண்டியல் கோயிலுக்கு பின்புறம் உள்ள பள்ளியின் தண்ணீா்த் தொட்டியில் கிடப்பது தெரியவந்தது. உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்கள் அதை உடைக்க முடியாததால் அப்படியே கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது.

மேலும் பரமத்திவேலூரில் தொடா் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com