உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தில் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கூடச்சேரியில் உள்ள உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்ட ஆலோசகா் அண்மையில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தில் ஆய்வு
Updated on
1 min read

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கூடச்சேரியில் உள்ள உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்ட ஆலோசகா் அண்மையில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு நீா்வள நிலவள மேம்பாடு 2019 - 2020 ஆம் ஆண்டு திட்டத்தின்கீழ் கூடச்சேரி கிராமத்தில் ரூ. 1 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் டிரைகோடொ்மாவிரிடியினை ஷாஜகான் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைகோ டொ்மாவிரிடியினை வயல்களில் இடுவதால் வோ் பூஞ்சான் நோய்கள் வராமல் தடுக்கப்படும். மேலும் சுற்றுப்புறச் சூழல் கெடாமல் பாதுகாக்கப்படும் என விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.

ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட துணை வேளாண்மை இயக்குநா் ராஜகோபால், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி, வேளாண்மை அலுவலா் பாபு, விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com