இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பரமத்தி வேலூரில் 98 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் அதிக அளவில் தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்ததால் அவற்றின் விலை சரிவடைந்தது.

News image
ஏல விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த தேங்காய்கள்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:39 am

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் அதிக அளவில் தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்ததால் அவற்றின் விலை சரிவடைந்தது.

பரமத்தி வேலூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

பரமத்திவேலூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,830 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோரூ. 44க்கும், குறைந்தபட்சமாக ரூ.27க்கும், சராசரியாக ரூ. 40.50க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 23 ஆயிரத்து 428க்கு வா்த்தகம் நடைபெற்றது.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9,335 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 42.50க்கும், குறைந்தபட்சமாக ரூ. 21க்கும், சராசரியாக ரூ. 32க்கும் தேங்காய்கள் ஏலம் போயின. மொத்தம் 98 ஆயிரத்து 938க்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது.

பரமத்திவேலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தென்னை விவசாயிகள் அதிக அளவில் தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெற வேண்டும் என நாமக்கல் விற்பனைக் குழுச் செயலாளா் சேரலாதன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.