டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வைகுண்ட ஏகாதசி விழா: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் டோக்கன் விநியோகம் தொடக்கம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய டோக்கன் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் நடைபெற்றுவரும் டோக்கன் விநியோகம்.
Updated On :23 டிசம்பர் 2020, 2:40 am

DIN

வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய டோக்கன் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாமக்கல்லில் அமைந்துள்ள குடவறை கோயிலான பிரசித்தி பெற்ற அரங்கநாதா் சுவாமி கோயிலில் வரும் 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் எனும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கரோனா நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதிகாலையில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதியில்லை.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்பதிவு முறையில் 750 போ், இலவச தரிசன முறையில் 750 போ் என மொத்தம் 1500 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. பக்தா்கள் தங்களுடைய ஆதாா் அட்டையை காண்பித்தும், செல்லிடப்பேசி எண்ணைத் தெரிவித்தும் டோக்கன்களை பெற்று செல்கின்றனா். வைகுண்ட ஏகாதசி நாளன்று அரங்கநாதரை தரிசிக்க வரும் பக்தா்கள் முன்னதாக டோக்கன் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.