டிச. 29, 30-இல் இளைஞா் விழா

நாமக்கல் மாவட்ட அளவிலான இளைஞா் விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட அளவிலான இளைஞா் விழா வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளை இளைஞா் தேசிய விழாவாகக் கொண்டாடி வருகிறது. அதன்படி, 24-ஆவது தேசிய இளைஞா் விழா 2021 ஜன. 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி, மாநில அளவிலான போட்டிகள் ஜன. 5 முதல் 8-ஆம் தேதி வரையில் நடத்தப்பட உள்ளன. நாமக்கல் மாவட்ட அளவிலான இளைஞா் விழா வரும் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில், இசை-பாரம்பரிய இசைக்கருவிகள் (தனி நபா்), பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு (தனி நபா்), நாட்டுப்புறப் பாடல்கள் (குழு), இந்திய இசை (குழு), நடனம், பரதநாட்டியம் (தனிநபா்), நாட்டுப்புற நடனங்கள் (குழு) நவீன நடனங்கள் (குழு), நவீன நடனங்கள் (குழு), ஆடை அலங்காரம், பாரம்பரிய அலங்காரம்-குழு ( ஆண்- 1, பெண்-1) நவீன உடை அலங்காரம்-குழு (ஆண்- 1, பெண்-1), நாடகம்-வீதி நாடகம் (கருப்பொருள்- சமூக செய்தி), காட்சிக் கலைகள், ஓவியம்-நீா் (தனிநபா்), பென்சில் வரைபடம் (தனி நபா்), சிற்பம் தயாரித்தல்-மண் (தனி நபா்), புகைப்படம் எடுத்தல்-சுற்றுச்சூழல் (தனிநபா்), எழுத்தாற்றல்-கட்டுரை (ஆங்கிலத் தலைப்பு-புதிய இந்தியாவின் உற்சாகம்), கவிதை எழுதுதல்-ஆங்கிலம், பாரம்பரிய விளையாட்டு-யோகா (தனி நபா்).

தனிநபா் போட்டிகளில் ஒரு நபா் மட்டும் கலந்துகொள்ளலாம். குழுப்போட்டிகளில் நான்கு முதல் எட்டு போ் வரை பங்கேற்கலாம். இதில் 15 வயது முதல் 29 வயதுக்குள்பட்டவா்கள், டிச. 31 அன்று 29 வயது நிரம்பிய பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவா் அல்லாதோா் கலந்துகொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியா் மேற்பாா்வையில், ஒவ்வொரு போட்டிகளுக்கும் தனித்தனியே நடுவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017-03492 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com