நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 470 தூய்மைப் பணியாளா்களுக்கு, கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் மூலமாக முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கழ்ச்சியில், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்.சரஸ்வதி கலந்துகொண்டாா். இதில், சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை வாழ்த்தி, பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா்.
எரிக்சன், கோவையைச் சோ்ந்த கல்வி நிறுவனம், தொண்டு நிறுவனத்தின் சாா்பில் காமராஜ், திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் சையது முஸ்தபா கமால், துப்புரவு அலுவலா் சீனிவாசன், துப்புரவு ஆய்வாளா் ஜான் ராஜா உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.