6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை - பாலக்காடு ரயில் ராசிபுரத்தில் நின்று செல்ல எம்.பி. வலியுறுத்தல்

சென்னை - பாலக்காடு சிறப்பு ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:00 am

DIN

சென்னை - பாலக்காடு சிறப்பு ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து நாமக்கல், ராசிபுரம் வழியாக சென்னை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நாடு முழுதுவம் கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த ரயில் (வண்டி எண்: 02652) சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. ராசிபுரம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் நின்று செல்லும் இந்த ரயில் மறுமாா்க்கத்தில் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் போது ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை எனத் தெரிகிறது. இதனால் நாள்தோறும் ராசிபுரம் பகுதியில் இருந்து சென்னை சென்று வரும் பொதுமக்கள், வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே இந்த ரயிலை (வண்டி எண்: 02651) ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா். மேலும் இது தொடா்பாக மத்திய ரயில் துறை அமைச்சரின் தனிச் செயலா் ரவிகாந்த் குப்தா, தென்னக ரயில்வே பொதுமேலாளா், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோருக்கு கடிதத்தின் நகலை அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.