கூட்டுறவு சங்கத்தில் ரூ. 10 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை 300 மூட்டை மஞ்சள் ரூ. 10 லட்சத்துக்கு விற்பனையானது.


திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை 300 மூட்டை மஞ்சள் ரூ. 10 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். ஏலம் மூலம் ரூ. 10 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டால் ரூ. 5,499 முதல் ரூ. 6,009 வரையும், ழங்கு ரகம் ரூ. 5,096 முதல் ரூ. 5,823 வரையும், பனங்காளி ரகம் ரூ. 8,002 முதல் ரூ. 10,019 வரையும் விற்பனையாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...