ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாமக்கல்லில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம்

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோர்.
Updated On :19 நவம்பர் 2020, 1:23 pm

DIN

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை நிகழ்ச்சியை நடத்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திட்டமிட்டார். கடந்த 5-ஆம் தேதி திருத்தணியில் யாத்திரை தொடங்க இருந்த நிலையில் தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. அதனை மீறி யாத்திரையில் பங்கேற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் மாவட்ட வாரியாக தடையை மீறி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர்கள் வி‌.பி. துரைசாமி, அண்ணாமலை, யாத்திரை நிகழ்வு இணை பொறுப்பாளர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. 

மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளையும், இந்துக்களின் எழுச்சியைக் காட்டுவதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளவுமே யாத்திரை கூட்டம் நடைபெறுவதாக கூட்டத்தில் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றதால் அதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.