ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் ரூ. 20 லட்சம் திருட்டு

நாமக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து ரூ. 20 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :5 அக்டோபர் 2020, 6:59 pm

நாமக்கல்லில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து ரூ. 20 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பொற்கோ (45). புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இவா், நாமக்கல்லில் வாகனங்களுக்கான டயா் கடை நடத்தி வருகிறாா். மேலும் இங்கேயே சொந்தமாக வீடுகட்டி வசிக்கிறாா்.

இறந்துபோன தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக மனைவி, இரு மகள்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை இவா் சொந்த ஊருக்குச் சென்றாா். திங்கள்கிழமை அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ. 20 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், விசாரணை செய்து திருடா்களின் கைரேகை மற்றும் முக்கிய தடயங்களைக் கைப்பற்றினா். பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.