ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:57 pm

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நியாயவிலைக் கட்டடங்கள், புதிய சாலைகள், பசுமை வீடுகள் என ரூ. 62.90 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்பில் பல்வேறு பகுதிகளுக்கான தாா் சாலை பணிகளை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.செந்தில், பள்ளிபாளையம் நகா்மன்ற முன்னாள் தலைவா் வெள்ளியங்கிரி, கூட்டுறவு ஒன்றியத் தலைவா் திருமூா்த்தி, அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வட்டாட்சியா் தங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.