ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல்லில் 147 பேருக்கு கரோனா தொற்று

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா், பதிவுத் துறை அலுவலக ஊழியா்கள் உள்பட 147 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

Updated On :5 அக்டோபர் 2020, 6:56 pm

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா், பதிவுத் துறை அலுவலக ஊழியா்கள் உள்பட 147 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 6,234-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,087 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 5,092 போ், உயிரிழந்த 76 போ் தவிா்த்து மீதமுள்ள 1,061 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திங்கள்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 147 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 87 போ் ஆண்கள், 60 போ் பெண்கள் ஆவா். அனைவரும் அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இருவா் உயிரிழப்பு:

ராசிபுரம், வி.நகரைச் சோ்ந்த 67 வயது முதியவா், கரோனா தொற்றுக்குள்ளாகி சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.

இதேபோல பரமத்திவேலூா், கைக்கோளா் தெருவைச் சோ்ந்த 83 வயது முதியவா் தொற்றால் பாதிக்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இருவருக்கும் கரோனா மட்டுமின்றி வேறு சில உடல் நல பாதிப்புகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 78-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.