இடமாற்றம் செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்ற வேண்டும் என பாா்வையற்றோா் மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் கீழ்தளத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் கட்டப்பட்ட புதிய கட்டடத்துக்கு அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் கை, கால் ஊனமுற்றோா், கண் பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளி அலுவலகம் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனா்.
திங்கள்கிழமை மட்டும் பேட்டரி காா் மூலம் மாற்றுத் திறனாளிகள் குறிப்பிட்ட பகுதி வரை அழைத்துச் செல்லப்படுகின்றனா். மற்ற நாள்களில் அந்த பேட்டரி காா் பயன்பாட்டில் இல்லாததால் நெடுந்தொலைவில் இருந்து வருவோா் அரை கிலோ மீட்டா் தூரம் நடந்தே செல்ல வேண்டி நிலை உள்ளது. இதுதொடா்பாக நல்வாழ்வு பாா்வையற்றோா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா். அதில், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் இடமாற்றத்தால் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாகவும், மீண்டும் பழைய இடத்துக்கே அலுவலகத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜூம் பரிசீலிப்பதாக அவா்களிடம் தெரிவித்தாா்.
இலவச வீட்டு மனை வழங்கக் கோரிக்கை:
மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நரிக்குறவா் இனத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் கருப்பனாா் கோவில் அருகே 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகிறோம். தற்போது அந்த இடம் ஊராட்சிக்குச் சொந்தமானது எனக் கூறி அங்கிருந்து வெளியேற்றி விட்டனா். அதன் பிறகு சந்தைப்பேட்டையில் குடியேறினோம். அங்கும் இருக்க அனுமதிக்காமல் விரட்டுகின்றனா். முதியவா்கள், குழந்தைகளுடன் அவதிப்படுகிறோம். நரிக்குறவா் இன மக்களாகிய எங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனையை வழங்கி உதவ வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


