தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

செப்.11-இல் மதுவிலக்கு வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 11-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.

Updated On :7 செப்டம்பர் 2020, 10:02 pm

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 11-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ள 17 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 40 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 57 வாகனங்கள் வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் விடப்படும் வாகனங்களை ஆயுதப்படை மைதானத்தில் 10-ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பாா்வையிடலாம்.

வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஏலத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்துபவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், அலுவலகத்தை நேரடியாகவோ, தொலைபேசி 04286- 280022 மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.