சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

News image
நாமக்கல்–சேலம் சாலையில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் போக்குவரத்து நெரிசலில் திணறிய வாகனங்கள்
Updated On :9 செப்டம்பர் 2020, 2:00 pm

DIN

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை வெளுத்து வாங்குகிறது. சேலம், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஒரு வாரமாக அறிவித்து வந்தபோதும் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. 

கொல்லிமலையில் மட்டும் அதிகப்படியான மழைப் பொழிவு இருந்தது.  இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல் வானம் இருண்டு மேகங்கள் திரண்டபடி காட்சியளித்தன. 5 மணிக்கு மேல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழையால் நாமக்கல்–சேலம் சாலை, பரமத்தி சாலை, மோகனூர் சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை  உள்ளிட்ட பகுதிகள் ஆறு போல் மாறின. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஆங்காங்கே சாலைப் பணிகள் நடைபெறுவதால் நடந்து சென்றோர் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்த நிலை காணப்பட்டது.

Story image

சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர், மழை நீருடன் கலந்து சாலைகளில் தேங்கிய வண்ணம் காட்சியளித்தன. மழையும் பொருட்படுத்தாமல் நகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக நாமக்கல்–சேலம் சாலையில் ஆறு போல் மழை நீர் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.

பிற்பகல் 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் மழை பெய்ததால் நாமக்கல் நகரப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.வெளிமாவட்டங்களில் இருந்தும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு வந்தோர் மிகவும் சிரமத்திற்கு இடையே தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.