காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,838 பேர் பங்கேற்பு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 4838 பேர் எழுதினர்

News image
நாமக்கல் மாவட்டத்தில் 4,838 பேர் நீட் தேர்வு எழுதினர்.
Updated On :13 செப்டம்பர் 2020, 10:08 am

DIN

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, நாமக்கல் மாவட்டத்தில் 4838 பேர் எழுதினர். நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 4,838 மாணவ, மாணவியர் எழுதினர்.

இத் தேர்வுக்காக குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி, நாமக்கல் செல்வம் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் அகாதெமி, பரமத்தி பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரி, நாமக்கல் டிரினிடி அகாதெமி, பரமத்தி நவோதயா மெட்ரிக் பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகிய 9 மையங்களில் நீட் தீர்வானது நடைபெற்றது. 

தேர்வையொட்டி காலை 11 மணிக்கு மாணவ மாணவியர் சமூக இடைவெளியில் நிறுத்தப்பட்டு பல்வேறு கட்ட சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு ஐந்து மணிக்கு நிறைவடைந்தது. 

நீட் தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு மையத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.